இந்தியா
2020 முதல் ஏடிஎம் கார்டுகளுக்கு குட்பாய்.... கைரேகை மூலம் பணப்பரிவர்த்தனை
2020 முதல் ஏடிஎம் கார்டுகளுக்கு குட்பாய்.... கைரேகை மூலம் பணப்பரிவர்த்தனை
2020-ஆம் ஆண்டு முதல் ஏடிஎம், கிரெடிட், டெபிட் கார்டு போன்றவைகளுக்கு குட்பாய் சொல்லிவிட்டு எந்த அட்டைகளும் இல்லாமல் நம் கைரேகை மூலமாகவே பணப்பரிவர்த்தனை என்பது சாத்தியமாகும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த திட்டங்களுக்கான ஆலோசனைகளை வழங்கும் நிதி ஆயோக் அமைப்பு, சமூக நலனுக்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது. இதன் மூலம், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ஏடிஎம், டெபிட் கார்டு போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள் இல்லாமல், கைரேகையை வைத்தே ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கான செயலிகளை நிதி ஆயோக் வடிவமைத்து வருவதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.