குழந்தைகளை கொண்ட ஆபாச இணைய தளங்களை ஜூலை 31க்குள் முடக்க வேண்டும் என இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து இயங்கும் தளங்கள் உட்பட சுமார் ஆயிரத்து 500 இணைய தளங்களை முடக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின் படி, மத்திய அரசு பல்வேறு அமைச்சக அதிகாரிகள் கொண்ட குழுவை உருவாக்கியது. அந்தக் குழு, குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோ அடங்கிய இணையதளங்களை முடக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.