புதிதாக பொறுப்பேற்றுள்ள உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பசுக்களை பாதுக்காப்பதில் தனது அரசாங்கம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
திரிவேந்திரசிங் ராவத் பதவி ஏற்ற பின் நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில், உத்தரகண்ட் அரசாங்கம் பசுக்கள் பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தி மாடுகளை பாதுக்காக்கும் என தெரிவித்தார். இந்த சட்டம் 2007-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் முந்தைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றியது என்றும் அவர் கூறினார்.
உத்தரகண்டின் பசு பாதுகாப்பு சட்டத்தின் படி பசுவை கொல்வது, பசு இறைச்சி விற்பது, உட்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டம் கன்றுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கிறது. நகரப்புறங்களில் பிறக்கும் கன்றுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.