“பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” - அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

“பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” - அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
“பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்” - அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
Published on

பசுவை மதித்தால் மட்டுமே நாடு செழிக்கும், எனவே இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் பசு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஜாவேத் என்பவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்தது. நீதிபதி சேகர் குமார் யாதவ் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு, பசுக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கான மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும், "பசு பாதுகாப்பு பணி ஒரு மதத்தின் பணி மட்டுமல்ல, பசு இந்தியாவின் கலாச்சாரமாகும், மதத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் கலாச்சாரத்தையும் காப்பாற்றும் பணி இதுவாகும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே என்றும், அவர்கள் வித்தியாசமாக வழிபடலாம், ஆனால் அவர்களின் சிந்தனை நாட்டிற்கு ஒன்றுதான் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களில், "அரசு கோசாலைகளை கட்டுகிறது, ஆனால் பசுவை பராமரிக்க வேண்டிய மக்கள் மாடுகளை கவனிப்பதில்லை. அதுபோலவே, தனியார் கோசாலைகளும் இன்று வெறும் போலித்தனமாக மாறிவிட்டன, வர்கள் பொதுமக்களிடம் நன்கொடை பெற்று அரசாங்கத்தின் உதவியுடன் பசு ஊக்குவிப்பு என்ற பெயரில் செய்கிறார்கள், ஆனால் அதை தங்கள் சொந்த நலனுக்காக செலவிடுகிறார்கள் மற்றும் பசுவை கவனித்துக்கொள்வதில்லைஎன தெரிவித்திருக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com