ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர் ஒருவர் சிஏ தேர்வுக்குத் தயாராகிவரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் கன்ஞ்சம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரரியான விஜய் குலன்ஞ் உள்ளிட்டோர் மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இளைஞர் புத்தகத்துடன் அமர்ந்து சிஏ தேர்விற்காக படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு பாராட்டிவிட்டுச் சென்றனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Success is not coincidence. You need dedication. I visited Covid hospital & found this guy doing study of CA exam. Your dedication makes you forget your pain. After that Success is only formality. <a href="https://t.co/vbIqcoAyRH">pic.twitter.com/vbIqcoAyRH</a></p>— Vijay IAS (@Vijaykulange) <a href="https://twitter.com/Vijaykulange/status/1387215880962985985?ref_src=twsrc%5Etfw">April 28, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இந்த புகைப்படத்தை விஜய் குலன்ஞ் தனது ட்விட்டரில் பதிவிட்டு, “வெற்றி தற்செயல் அல்ல, அதற்கு அர்ப்பணிப்பு தேவை. உங்களின் அர்ப்பணிப்பானது உங்களுடைய அனைத்து வலிகளையும் மறக்கச் செய்யும். அதன்பிறகு இந்த வெற்றியானது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருக்கும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.