இந்தியாவில் முதல் முறையாக, ஹரியானாவில் வாட்ஸ்ஆப் மூலம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஹரியானா மாநிலம் அனுராக் ஷாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்பிர் சிங். இவருக்கும் அவரது சகோதரர்களான ராம்தியாள் மற்றும் கிருஷ்ணன் குமார் ஆகியோருக்கு இடையே குடும்ப சொத்தை பாகம் பிரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து சர்பிர் சிங், தனது சகோதரர்கள் மீது ஹரியானா நிதி ஆணையர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அவரது இரண்டு சகோதரர்களுக்கும் நிதி ஆணையர் அசோக் கேம்கா உத்தரவிட்டார். இந்த மனுவை ராம்தியாள் பெற்று கொண்டார். ஆனால் மற்றோரு சகோதரரான கிருஷ்ணன் குமார், காத்மண்டு சென்று விட்டதால் அவருக்கு கொடுக்க முடியவில்லை. கிருஷ்ணன் குமார் காத்மண்டுவில் இருக்கும் அவரது முகவரி, இ-மெயில் ஆகிய விவரங்களை கொடுக்க மறுத்ததால் அவருக்கு வாட்ஸ்ஆப்பில் சம்மன் அனுப்பட்டுள்ளது.