கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மலேசியாவில் இருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மேலும் மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31-ஆம் தேதி வரை மூட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.