கொரோனா தடுப்பூசியை போடுவதில் வயதானவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தயாரித்துள்ள தடுப்பூசி, 3ஆம் கட்ட மனித பரிசோதனைகளில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனையும் நடந்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தடுப்பூசிகளும் விரைவில் பயன்பட்டுக்கு வர உள்ள நிலையில், அவற்றை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்ன், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 முதல் 30 கோடி வரையிலான மக்களுக்குக்காக 40 முதல் 50 கோடி டோஸ்கள் வரை தடுப்பூசி கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்றும் தடுப்பூசி போடுவதில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.