இந்தியாவில் கொரோனா பரவல்... 18 மாநிலங்களில் குறைவு; 16 மாநிலங்களில் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல்... 18 மாநிலங்களில் குறைவு; 16 மாநிலங்களில் அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல்... 18 மாநிலங்களில் குறைவு; 16 மாநிலங்களில் அதிகரிப்பு
Published on

இந்தியாவின் 18 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிகை குறையத் தொடங்கியுள்ளது. 16 மாநிலங்களில் பெருந்தோற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிகை அதிகரித்துள்ளது.

இந்தியாவை கடந்த சில வாரங்களாக ஆட்டிப்படைத்து கொண்டிக்கும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பல மாநிலங்களில் குறையத் தொடங்கியிருப்பதாக கிடைத்திருக்கும் தகவல்கள் சற்று ஆறுதலளிக்கும் வகையில் உள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார், குஜராத், மத்தியபிரதேஷம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் சில யுனியன் பிரதேசங்களிலும் கொரோனாவின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருக்கிறது.

அதேவேளையில் கர்நாடாகா, கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம், பஞ்சாப், அசாம், ஒடிசா, ஹிமாச்சல் பிரதேஷம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட 16 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 61 நாட்களில் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிகையை விட குணமடைந்தோர் எண்ணிகை முதன்முறையாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 29 ஆயிரத்து 942 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 3 லட்சத்து 56 ஆயிரத்து 82 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com