கொரோனா பரவல் எதிரொலி: முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் - பயணிகள் ஏமாற்றம்

கொரோனா பரவல் எதிரொலி: முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் - பயணிகள் ஏமாற்றம்
கொரோனா பரவல் எதிரொலி: முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் - பயணிகள் ஏமாற்றம்
Published on

இடுக்கி டிடிபிசி கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுலா தலங்கள் மூடல் முன்னறிவிப்பின்றி மூடியதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாக கருதப்படுவதும், சர்வதேச சுற்றுலா தல அங்கீகாரம் பெற்ற மூணாறு இரவிகுளம் தேசிய பூங்கா மற்றும் தேக்கடி. இவை இரண்டும் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இடுக்கியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும் இந்த இரண்டு சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு கொரோனா விதிமுறைகளுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தின் டிடிபிசி., (DISTRICT TOURISM PEROMOTION COUNCIL) கட்டுப்பாட்டில் இயங்கும் வாகமண், அருவிக்குழி, ராமக்கல்மேடு, ஆமைப்பாறை, கால்வரி மவுண்ட், மொட்டக்குன்று, ராமக்கல்மேடு ஆகிய சுற்றுலா தலங்கள் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முன்னறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளது.

எந்த முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ள இந்த சுற்றுலா தலங்களுக்கு, பணம் செலவு செய்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com