”தண்ணீர் கூட இல்லை.. மூச்சுத்திணறுகிறது” இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பேசிய ஷாக் வீடியோ

”தண்ணீர் கூட இல்லை.. மூச்சுத்திணறுகிறது” இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பேசிய ஷாக் வீடியோ
”தண்ணீர் கூட இல்லை.. மூச்சுத்திணறுகிறது” இறப்பதற்கு முன் கொரோனா நோயாளி பேசிய ஷாக் வீடியோ
Published on

உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி நகரத்திலுள்ள மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப் கொரோனா நோயாளி ஒருவர் “மருத்துவமனையில் தனக்கு எந்த கவனிப்பும் இல்லை. தண்ணீருக்கான ஏற்பாடுகூட இல்லை. நான் இங்கு மிகவும் தொந்தரவாக உணருகிறேன். என்னை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும். மருத்துவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்” என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, உத்திரபிரதேச மாநில முதல்வருக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது. ஏற்கனவே, கோரக்பூரில்  கடந்த 2017 ஆம் ஆண்டு ஆக்ஸிசன் குறைப்பட்டால் 42 குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிரச் செய்தது. அப்போதே, அம்மாநில முதல்வர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனை

வீடியோ வெளியிட்ட அந்த நோயாளி தற்போது உயிருடன் இல்லை. அவரது உறவினர்கள் மருத்துவ அலட்சியமே என்று குற்றம் சாட்டுகிறார்கள்.  மேலும், இதே உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் பிரயாகராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவரும் இதே குற்றச்சாட்டை வைத்திருந்தார். அவர் இறப்பதற்கு முன்பு பேசிய ஆடியோவை, அவரது குடும்பத்தினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவில், அவர் “இரவு முழுவதும் என் வாய் வறண்டு இருந்தது.  கடுமையான மூச்சுத்திணறலை எதிர்கொண்டேன். ஆனால், மருத்துவமனை அலட்சியமாக இருந்தது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com