கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாசப்படம் வெளியாகி சர்ச்சை

கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாசப்படம் வெளியாகி சர்ச்சை
கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாசப்படம் வெளியாகி சர்ச்சை
Published on

கர்நாடக மாநில அமைச்சர் ரமேஷ் ஜெகர்ஹோலியின் ஆபாசப்படம் இணையதளத்தில் வெளியானதால் சர்ச்சை உருவாகியிருக்கிறது.

கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜெகர்ஹோலி சம்பந்தப்பட்ட பாலியல் சர்ச்சை குறித்து விசாரணை கோரி, சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடக்கும் என பெங்களூரு மத்திய டி.சி.பி அனுச்சேத் தெரிவித்தார். அமைச்சர் ரமேஷ் ஜெகர்ஹோலி பாலியல் டேப் வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறி பெங்களூரில் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினார்கள்

தமிழகத்தின் காவிரி - குண்டாறு திட்டத்தை ஒரு போதும் ஏற்க முடியாது, இதை உச்சநீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக எதிர்ப்போம் என சில நாட்களுக்கு முன் டெல்லியில் ரமேஷ் ஜெகர்ஹோலி பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com