பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் சார்பில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.
உத்தரப் பிரதேசம், கோவா, உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடந்த 130 நாட்களுக்கு மேலாக உயர்த்தப்படாமல் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. இந்தச் சூழலில் இந்த விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லி விஜய் சவுக் பகுதியில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர். மத்திய அரசை கண்டிக்கும் வகையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.