நிதியமைச்சரின் பட்ஜெட்டா? சந்திரபாபு, நிதிஷ் தயாரித்த பட்ஜெட்டா? - நுகர்வோர் அமைப்பின் வழக்கறிஞர்!

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பலவித அம்சங்கள் குறித்தான விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் அதில் உள்ள போதாமைகள் குறித்தும் விவாதங்கள் நடக்கின்றன.
வழக்கறிஞர் முருகன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வழக்கறிஞர் முருகன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்pt web
Published on

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பலவித அம்சங்கள் குறித்தான விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் அதில் உள்ள போதாமைகள் குறித்தும் விவாதங்கள் நடக்கின்றன.

Budget 2024 - 2025 Nirmala sitharaman
Budget 2024 - 2025 Nirmala sitharamanபுதிய தலைமுறை

இந்நிலையில் புதிய தலைமுறையில் நடந்த பட்ஜெட் தொடர்பான விவாதத்தில், நுகர்வோர் அமைப்பில் இருந்து கலந்துகொண்ட வழக்கறிஞர் முருகன் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, “இன்றைய அறிவிப்புகளைப் பொருத்தவரை தங்கம் வாங்கலாம்; விலை குறைந்துவிட்டது. ஆனால், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கொடுங்கள் என கேட்கிறார்கள். அதற்கான அறிவிப்பு இல்லை. இன்றைக்கும் போதிய வருமானம் இல்லை என சாகும் விவசாயிகள் இருக்கின்றனர். விவசாயத்தால் கிடைக்கும் வருமானம் நாட்டில் தேசிய வருமானத்தில் 14% என சொல்கிறோம்.

விவசாயிக்கான வருமானம் என்ன? விவாசாயிகளின் குரலுக்கு செவிமடுக்காத பட்ஜெட்தான் இது. இது நிர்மலா சீதாராமன் தயாரித்த பட்ஜெட்டா நாயுடுவும் நிதிஷூம் தாயாரித்த பட்ஜெட்டா என தெரியவில்லை.

தமிழ்நாட்டில் மழையில் நெல்லை, தூத்துக்குடி, சென்னை மாவட்டங்கள் மழையில் தத்தளித்ததே, தமிழ்நாடு என்ற வார்த்தைக் கூட பட்ஜெட்டில் இடமில்லை. பட்ஜெட்டில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் இல்லை. உற்பத்தில் இல்லாமல் புதிதாக அறிவித்துக் கொண்டே சென்றீர்கள் என்றால் பணவீக்கம் வரும். உற்பத்தி இல்லை என்பதால் விலைவாசி உயரும். இது முற்றிலுமாக பணவீக்கத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட். சாமானியனுக்கு நல்லது நடப்பதற்கான வாய்ப்புகளே இல்லை.

தங்கம் விலை குறைத்துள்ளார்க. அது நாம் அன்றாடம் வாங்கும் பொருளா. நாம் அன்றாடம் வாங்கும் பொருக்கு எந்த விலையைக் குறைத்துள்ளார்கள். அடித்தட்டு மக்களின் அன்றாட சம்பளத்தை சமன் செய்யும் வகையில் வரி இருக்க வேண்டும்” என தெரிவித்தார். அவர் கூறிய முழுமையான கருத்துக்களை வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com