சனிக்கிழமைகளில் சிறப்பு நீதிமன்றம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

சனிக்கிழமைகளில் சிறப்பு நீதிமன்றம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
சனிக்கிழமைகளில் சிறப்பு நீதிமன்றம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Published on

குற்றவியல் மற்றும் சிறைக்கைதிகள் தொடர்பான மனுக்களை விசாரிக்க சனிக்கிழமைகளில் சிறப்பு நீதிமன்ற அமர்வுகளை அமைக்க, அனைத்து உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கும் தீபக் மிஸ்ரா எழுதியுள்ள கடிதத்தில், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் பல குற்றவியல் முறையீடுகளும், சிறைக் கைதிகளின் முறையீடுகளும் நிலுவையில் உள்ளது. இந்த மனுக்களை விசாரித்து முடிப்பதில் ஏற்படும் தாமதம், ஒட்டுமொத்த நீதி மற்றும் நிர்வாகத்தின் செயல்திறன் மீதும் கேள்வியை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இதுபோன்ற மனுக்களை தாமதமின்றி விசாரிக்க, சனிக்கிழமைகளிலும் சிறப்பு நீதிமன்ற அமர்வுகளை அமைக்கலாம் என தீபக் மிஸ்ரா உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளுக்கு அந்தக் கடிதத்தின் மூலம் யோசனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com