இந்திய ரூபாய் மதிப்பு முதல்முறையாக 83க்கு கீழே சரிந்துள்ளது. மேலும், ரூபாய் மதிப்பு சரிவை சமாளிக்க ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி கையிருப்பை பயன்படுத்தி வருவதாலும் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும் சரிந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.
இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நேற்று பதவியேற்ற நிலையில், “இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 85 பில்லியன் டாலர் சரிந்துவிட்டது. வளர்ந்து வரும் நாடுகளில் அதிகம் சரிந்த நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று. இதுகுறித்து நிதியமைச்சரோ, பிரதமரோ ஏதாவது கூறுவார்களா? என டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.