கர்நாடகா சட்டமன்றத்தில் சவார்க்கரின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து, கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் சட்டமன்றத்திலேயே போராட்டம் செய்தனர். அத்துடன் சபாநாயகரிடம் `சவார்க்கரின் உருவப்படத்திற்குப் பதிலாக வால்மீகி, பாசவான்னா, கனகா தாசா, பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர்களின் உருவப்படத்தையும் வைக்கவேண்டும்’ என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறுகையில், “எப்போதெல்லாம் விவேகானந்தர், சுபாஷ் சந்திரபோஸ், சாவர்க்கர், மகாத்மா காந்தியின் கொள்கை பற்றி மக்களிடம் கூறுகிறோமா, அப்போதெல்லாம் இப்படித்தான் துரதிஷ்டவசமாக அதை எதிர்க்கின்றனர். அவர்கள் எல்லாம் தேசத்திற்காக அவர்களின் வாழ்வையே அர்ப்பணித்துள்ளனர்” என்றுள்ளார்.