மக்களவையில் புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கம் தமிழில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் தொடர் என்பதால் தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி எம்பியாக பதவியேற்றார். தொடர்ச்சியாக அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் மக்களவை எம்பிகளாக பதவியேற்றனர்.
அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்டோருக்கும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் சதானந்த கவுடா, பிரகலாத் ஜோஷி ஆகியோர் கன்னடத்திலும், அமைச்சர் ஜிதேந்திர சிங் டோக்ரி மொழியிலும், ரமேஸ்வர், நபா குமார் உள்ளிட்ட எம்பிக்கள் அசாம் மொழியிலும் பதவியேற்றுக் கொண்டனர். சிவசேனா எம்பி அரவிந்த் சாவன் மராத்தியிலும், ஆந்திராவைச் சேர்ந்த பல எம்பிக்கள் தெலுங்கிலும் பதவியேற்றனர். அதேபோல ஜம்மு-காஷ்மீர் எம்பியான ஃபரூக் அப்துல்லா காஷ்மீரி மொழியில் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநில எம்பிக்கள் கன்னட மொழியில் பதவியேற்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி.வைத்திலிங்கம் தமிழில் இன்று பதவியேற்றார். குர்தாஸ்பூர் எம்.பியாக, நடிகர் சன்னி தியோல் இன்று பதவியேற்றார்.