பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு

பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு
பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் வழக்கு
Published on

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது. 

காங்கிரஸ் எம்.பியும், மகிளா காங்கிரஸ் தலைவருமான சுஷ்மிதா தேவ், உச்சநீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ’’தேர்தல் பரப்புரையில் பிரதமரோ, அவர் கட்சியை சேர்ந்தவர்களோ நாட்டின் ராணுவத்தை உரிமை கொண்டாடக் கூடாது என்பது தேர்தல் விதி. ஆனால் விதியை மீறி பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆதாயத்துக்காக, புல்வாமா தாக்குதல், அபிநந்தன் விவகாரம் போன்றவற்றை பேசிவருகின்றனர்.

இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.  இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் கோரிக்கையாக வைக்கப்பட்டது.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை குறிப்பிடாமல், பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர், நாட்டின் பிரதமர் ஒருவர் என வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி, ’நீதிமன்றத்தில் அனைவரும் சமம், பிரதமர் என்றால் அவர் பெயரை சுட்டிக்காட்டுங்கள், அமித் ஷா என்றால் அவர் பெயரைக் குறிப்பிடுங்கள்’ என்று சொல்லி, இந்த வழக்கை நாளை விசாரிப்பதாகக் கூறி தள்ளி வைத்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com