ஹரியானா தேர்தல் முடிவு | EVM மீது குற்றச்சாட்டு.. ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த காங்.!

ஹரியானா தேர்தல் முடிவு குறித்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், இன்று அதன் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது.
பவன் கேரா
பவன் கேராஎக்ஸ் தளம்
Published on

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் நேற்றைய வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கத்தில் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தநிலை பின்னர் மாறி, பாரதிய ஜனதாவுக்கு வெற்றியாக அமைந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

முன்னதாக, ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம், தேர்தல் ஆணைய இணையதளத்தில் தாமதமாகப் பதிவிடப்படுவதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக அவர், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அவரது குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறியது.

அதேநேரத்தில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டிய ஜெய்ராம் ரமேஷ், “வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பல முக்கியமான புகார்கள் வந்துள்ளன. ஹரியானாவில் உள்ள எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் நாங்கள் பேசியுள்ளோம். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

ஹரியானா
ஹரியானா

இந்த நிலையில், ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, அக்கட்சியின் தலைவர்கள் இன்று மாலை, டெல்லி தேர்தல் ஆணையத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “20 இடங்களில் ஹேக்கிங் நடந்துள்ளது. அதில், கர்னால், டப்வாலி, ரேவாரி, பானிபட் சிட்டி, ஹோடல், கல்கா மற்றும் நர்னால் உள்ளிட்ட 7 இடங்களுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். மற்ற 13 இடங்களுக்கான ஆவணங்கள் 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும். விசாரணை முடியும்வரை அனைத்து இயந்திரங்களையும் சீல்வைத்து பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கமலா ஹாரிஸ் பற்றிய புத்தகம் விற்பனையில் சாதனை.. படித்த வாசகர்களுக்கு ஏமாற்றம்; நெட்டிசன்கள் கிண்டல்!

பவன் கேரா
ஹரியானா தேர்தல் முடிவு | ஏற்காத காங்கிரஸ்.. EVM மீது குற்றச்சாட்டு.. தேர்தல் ஆணையத்தில் புகார்!

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, ஹரியானாவில் உள்ள மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 37 இடங்களிலும், ஆளும் பாஜக 48 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றியதால், அக்கட்சியே மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. முன்னதாக, ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்x page

முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு, தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், ‘காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேராவின் முடிவுகள் ஏற்கத்தக்கவை அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா உட்பட நாட்டில் உள்ள அனைத்து தேர்தல்களிலும் ஒரேமாதிரியாகதான் தேர்தல் நடத்தப்படுகிறது’ என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஷேக் ஹசீனா எங்கே? இணையத்தில் தேடல் அதிகரிப்பு.. வங்கதேச இடைக்கால அரசு சொல்வது என்ன?

பவன் கேரா
ஹரியானா: காங். தோல்வி.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜிலேபி.. ராகுலை விமர்சிக்கும் பாஜக.. ஏன் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com