பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த 15 நாட்களில் 10 விரும்பத்தகாத சம்பவங்கள்.. பட்டியலிட்டு விமர்சித்த ராகுல்!

NDA அரசின் முதல் 15 நாட்களில், நீட், நெட் தேர்வு முறைகேடுகள், ரயில் விபத்து உள்பட 10 விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், ஆட்சியை காப்பாற்றுவதிலேயே பிரதமர் கவனம் செலுத்துவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
pm modi, rahul gandhi
pm modi, rahul gandhipt web
Published on

3ஆவது முறையாக அமைந்துள்ள பிரதமர் மோடியின் அரசு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, கூட்டணி அரசின் முதல் 15 நாட்களில் 10 விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். அதில், ரயில் விபத்து, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், நீட் முறைகேடு, நீட் முதுகலை தேர்வு ரத்து, நெட் வினாத்தாள் கசிவு, தண்ணீர் தட்டுப்பாடு, வெப்ப அலையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காததால் ஏற்படும் உயிரிழப்புகள் என பட்டியலிட்டுள்ளார்.

உளவியல் ரீதியாக நரேந்திர மோடி, பின்னடைவில் இருப்பதாகவும், அரசாங்கத்தை காப்பாற்றுவதிலேயே மும்முரமாக இருப்பதாகவும் ராகுல்காந்தி சாடியுள்ளார். மோடி மற்றும் அவரது அரசாங்கம், அரசியலமைப்பு சட்டத்தின் மீது மேற்கொள்ளும் தாக்குதலை ஏற்க முடியாது என்றும், எந்தச் சூழ்நிலையிலும் அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் ராகுல் தெரிவித்துள்ளளார்.

இந்தியாவின் வலுவான எதிர்க்கட்சியாக மக்களின் குரலாக முழங்குவோம் எனக் கூறியுள்ள ராகுல்காந்தி, அது பிரதமரை தப்பிக்கவிடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com