பிரதமர் சொன்னபடி சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் 20 வீரர்களை இழந்தோம்?: ப.சிதம்பரம்  

பிரதமர் சொன்னபடி சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் 20 வீரர்களை இழந்தோம்?: ப.சிதம்பரம்  
பிரதமர் சொன்னபடி சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் 20 வீரர்களை இழந்தோம்?: ப.சிதம்பரம்   
Published on

இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறவில்லை என்றால் ஏன் 20 வீரர்கள் இறந்தார்கள் என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்

 லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் சீன விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் காணொலியில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி,

“இந்தியாவிற்குள் சீனப்படைகள் ஊடுருவலில்லை. ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்கப் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நமது ஆயுதப் படைகள் மேற்கொள்ளும்'' எனத் தெரிவித்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை ப.சிதம்பரம் எழுப்பியுள்ளார். அதில், இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் கூறுகிறார். அது உண்மை என்றால், மே 5-6ம் தேதிகளில் அங்கு ஏன் பிரச்னை ஏற்பட்டது?

ஜூன் 16-17ம் தேதிகளில் இரு நாட்டு வீரர்களிடையே சண்டை நடந்தது ஏன்? இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? சீனா ஊடுருவவில்லை என்றால் ஜூன் 6-ல் நடந்த பேச்சுவார்த்தை என்ன? வானிலை நிலவரம் குறித்து பேசிக்கொண்டார்களா?

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என்றால் நிலைமையை மீட்டெடுப்போம் என வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை விட்டாரே.. அது ஏன்? ஊடுருவல் இல்லை என்றால் துருப்புக்களை "விடுவித்தல்" பற்றி இரு நாடுகள் ஏன் அதிகம் பேசிக்கொண்டனர்? அப்படியானால், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன இருக்கிறது? மேஜர் ஜெனரல்கள் ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள், எதைப் பற்றி? என கேள்வி எழுப்பியுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com