ஹரியானா தேர்தல் முடிவு | ஏற்காத காங்கிரஸ்.. EVM மீது குற்றச்சாட்டு.. தேர்தல் ஆணையத்தில் புகார்!

ஹரியானா தேர்தல் முடிவுகள் கள நிலவரத்திற்கு எதிராக உள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்எக்ஸ் தளம்
Published on

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரசுக்கு சாதகமாக இருந்த நிலை பின்னர் மாறி, பாரதிய ஜனதாவுக்கு வெற்றியாக அமைந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருந்தது. முன்னதாக, ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம், தேர்தல் ஆணைய இணையதளத்தில் தாமதமாகப் பதிவிடப்படுவதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக அவர், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அவரது குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறியது.

ஹரியானா
ஹரியானாமுகநூல்

ஹரியானா தேர்தல் முடிவு| ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

இந்தநிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ராம் ரமேஷ், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். தேர்தல் முடிவுகள் கள நிலவரத்திற்கு எதிராக உள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: ஹரியானாவில் வீழ்ச்சி.. ஜம்முவில் எழுச்சி.. 5வது மாநிலத்தில் கால்பதித்த ஆம் ஆத்மி.. காரணம் என்ன?

ஜெய்ராம் ரமேஷ்
ஹரியானா நிலவரம் | காங்கிரஸை பின்னுக்கு தள்ளி முன்னேறிய பாஜக.. தலைகீழாக மாறிய முன்னிலை நிலவரம்!

இதுகுறித்து அவர், “ஹரியானா தேர்தல் முடிவுக்கான தீர்ப்பு மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது. ஹரியானாவில் 3 மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்து இருக்கின்றன. தேர்தல் தொடர்பான அனைத்துப் புகார்களையும் திரட்டி தேர்தல் ஆணையத்திடம் அளிப்போம். காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வெற்றி பறிக்கப்பட்டு இருக்கிறது. ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது. ஹரியானா தேர்தல் முடிவுகள் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்றாக உள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பல முக்கியமான புகார்கள் வந்துள்ளன.
ஜெய்ராம் ரமேஷ்

ஹிசார், மகேந்திரகர் மற்றும் பானிபட் ஆகிய மூன்று மாவட்டங்களில் எங்கள் வேட்பாளர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிலவற்றில் பேட்டரி சதவிகிதம் 99 ஆக உள்ளது. இந்த இயந்திரங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. 60-70 சதவிகித பேட்டரி பவர் உள்ள இயந்திரங்ளில் எங்கள் வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பல முக்கியமான புகார்கள் வந்துள்ளன. ஹரியானாவில் உள்ள எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களிடம் நாங்கள் பேசியுள்ளோம். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் வெற்றிபெற்ற பாஜக!

மொத்தம் 90 சட்டப்பேரவைக் கொண்ட ஹரியானாவில், கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக பெரும்பான்மையையும் (46 இடங்கள்) தாண்டி 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இருக்கிறது. முன்னதாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 45-55 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ்தான் அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது. ஆனால் சில மணி நேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஹரியானா: காங். தோல்வி.. இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் ஜிலேபி.. ராகுலை விமர்சிக்கும் பாஜக.. ஏன் தெரியுமா?

ஜெய்ராம் ரமேஷ்
“வினேஷ் போகத் எங்கு சென்றாலும்..” - தேர்தலில் வெற்றிபெற்றதை கடுமையாக விமர்சித்த பிரிஜ் பூஷன் சிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com