குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு கேஸ் சிலிண்டர், 300 யூனிட் வரை இலவச மின்சாரம், 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது காங்கிரஸ்.
குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான பரப்புரை தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 8 முக்கிய அம்சங்கள் அடங்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி, இல்லத்தரசிகளுக்கு ரூ.500-க்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்; 300 யூனிட் வரை இலவச மின்சாரம்; அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று ‘கே.ஜி. முதல் முதுநிலை வரை பெண்களுக்கு இலவச கல்வி, மூன்றாயிரம் புதிய அரசு ஆங்கில வழி பள்ளிகள் தொடங்கப்படும். 10 லட்சம் அரசு வேலைகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். வேலையில்லாதோருக்கு மாதம் மூன்றாயிரம் உதவித்தொகை வழங்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனை. ரூபாய் 10 லட்சம் வரை இலவச சிகிச்சை. இலவச சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை. விவசாயிகளுக்கு மூன்று லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி பால் உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் 5 மானியம் வழங்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் ‘போதைப்பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். நகர்ப்புறங்களில் நகர்புற வேலை உறுதித்திட்டம்’ ஆகிய முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கிறது. இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

₹500 में LPG सिलेंडर,
युवाओं को 10 लाख नौकरियां,
किसानों का 3 लाख तक क़र्ज़ा माफ़ -

हम, गुजरात के लोगों से किए सारे #CongressNa8Vachan निभाएंगे।

भाजपा के ‘डबल इंजन’ के धोखे से बचाएंगे, प्रदेश में परिवर्तन का उत्सव मनाएंगे। pic.twitter.com/v1GtVP183L
— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2022

குஜராத் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ், புதிய கட்சி என ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இதையும் படிக்கலாமே: தொங்கு பாலம் விபத்திற்கு பிறகு செல்வாக்கை நிரூபிக்குமா பாஜக; குஜராத் தேர்தல்களம் ஓர் அலசல்