“வெறுப்பின் சந்தை மூடப்பட்டு, அன்பின் கடை திறந்திருக்கிறது” - ராகுலின் பதிலும், மோடியின் ட்வீட்டும்!

வெறுப்பின் சந்தை மூடப்பட்டு, அன்பின் கடை திறக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு பிறகு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Modi - Rahul Gandhi
Modi - Rahul GandhiPT
Published on

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்ற‌து. தேர்தல் முடிவடைந்தை ஒட்டி, தேர்தல் முடிவுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Karnataka Elections
Karnataka ElectionsPTI

மொத்த 224 தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 221 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவானது, தேர்தல் மையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 134 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி 64 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதியிலும் வெற்றியை பெற்றுள்ளன. தென்னிந்தியாவில் பாஜக நேரடியாக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருந்து வந்த நிலையில், இந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றியை கண்டுள்ளது.

வெறுப்பின் சந்தை மூடப்பட்டு, அன்பின் கடை திறக்கப்பட்டுள்ளது! - ராகுல் காந்தி

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்றதை அடுத்து, புதுடெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “கூட்டு முதலாளித்துவத்தை ஏழை மக்கள் தோற்கடித்துள்ளனர். இந்த தேர்தலில் நாங்கள் வெறுப்புடன் போட்டியிடவில்லை, அன்போடு மட்டுமே போட்டியிட்டோம். அதன் பலனாய் இன்று கர்நாடகாவில் வெறுப்பின் சந்தை மூடப்பட்டு, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

மேலும் கட்சியின் வெற்றிக்காக போராடிய கட்சித் தொண்டர்கள் மற்றும் கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்த ராகுல் காந்தி, கர்நாடக மக்களுக்கும் தன் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

முடிவில் “இது எல்லா மாநிலங்களிலும் நடக்கும்” என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வாழ்த்துக்கள்! - பிரதமர் மோடி

கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ள மோடி, “கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் “கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக கட்சித்தொண்டர்கள் மற்றும் கட்சித்தலைவர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்” என்று கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் மோடி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com