கர்நாடக வாக்கு சதவீதத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்..!

கர்நாடக வாக்கு சதவீதத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்..!
கர்நாடக வாக்கு சதவீதத்தில் பாஜகவை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்..!
Published on

கர்நாடகாவில் ஆட்சியை அமைக்கும் அளவிற்கு பாஜக வெற்றி முகம் கண்டுள்ள போதிலும் காங்கிரஸ் கட்சியை விட பாரதிய ஜனதாவிற்கு குறைவான அளவிலே வாக்கு சதவீதம் கிடைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.13 சதவிகித வாக்குகள் பதிவாகின.  தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே சரிக்கு சமமான போட்டி நிலவினாலும் தற்போது ஆட்சி அமைக்கும் அளவிற்கு ஏற்ப பாஜக முன்னிலை பெற்று வருகிறது. கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் தற்போது வரை பாஜக 110 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

இதனிடையே வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் கட்சி அதிகமாகவே பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவிற்கு 36.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 38 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது. மதச் சார்பற்ற ஜனதா தளம் 17.7 சதவீத வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. வாக்கு சதவீதம் என்பது ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் கட்சிக்கு பதிவான வாக்குகளை கொண்டு கணக்கீடு செய்யப்படும். அதாவது 222 தொகுதிகளில் எந்ததெந்த கட்சிகளுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளது என்பதை கொண்டு கணக்கீடு நடத்தப்படும். அதில் மொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.

சில தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை விட முன்னிலை வகிப்பதும், பல தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளை விட மிகக் குறைவான அளவு வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக முன்னிலை பெற்றிருப்பதும் வாக்கு சதவீதத்தில் காங்கிரஸின் வெற்றிக்கு காரணமாக உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 36.6 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. அதேசமயம் மதச் சார்பற்ற ஜனதா தளம் 20.2 வாக்குகள் சதவீதமும், பாரதிய ஜனதா கட்சி 19.9 வாக்குகள் சதவீதமும் பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு வாக்கு சதவீதம் அதிக அளவில் உயர்ந்துள்ள போதிலும், காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு சதவீதத்தை விட குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com