பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களைப் பார்த்து காங்கிரஸ் கட்சியினர் பொறாமைப்படுகின்றனர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, “மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்குள் ஒருவராக வாழ்வதையே நான் விரும்புகிறேன். சம்பிரதாய பதவிகளை ஏற்றுக்கொண்டு, மக்களிடம் இருந்து விலகி இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. யாராவது வற்புறுத்தினால் கூட நான் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மாட்டேன்” என்று கூறினார்.
மேலும், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களைப் பார்த்து காங்கிரஸ் கட்சியினர் பொறாமைப்படுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான, மோடியின் சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, இத்தகைய ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார்.