குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்திற்கு மீராகுமார் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிட்ட மீராகுமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, "குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்திற்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் முக்கியமான தருணத்தில் நாட்டின் அரசியல் சட்ட மாண்பைக் காக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத் தரப்பட்டிருக்கிறது" என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட மீராகுமார் மொத்தம் ஆயிரத்து 744 வாக்குகளை பெற்றுள்ளார். இவற்றின் மதிப்பு 3 லட்சத்து 67 ஆயிரத்து 314 ஆகும். ராம்நாத் கோவிந்த் 2930 வாக்குகள் பெற்றிருக்கிறார். இதன் மதிப்பு 7 லட்சத்து 2 ஆயிரத்து 44 ஆகும். புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் 25 ஆம் தேதி பதவியேற்கிறார்.