பாரத் ஜோடாவிலிருந்து மூன்றே நாள்களில் விலக நினைத்தாரா ராகுல்? என்ன காரணம்?

பாரத் ஜோடாவிலிருந்து மூன்றே நாள்களில் விலக நினைத்தாரா ராகுல்? என்ன காரணம்?
பாரத் ஜோடாவிலிருந்து மூன்றே நாள்களில் விலக நினைத்தாரா ராகுல்? என்ன காரணம்?
Published on

ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 140 நாள்கள் மேற்கொண்டிருந்த இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம், இந்த வருட தொடக்கத்தில்தான் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ராகுல் காந்தியின் அந்த யாத்திரை குறித்து காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், “நடைபயணம் தொடங்கிய மூன்றாவது நாளிலேயே ராகுல் காந்திக்கு தாங்கமுடியாத அளவுக்கு மூட்டுவலி வந்துவிட்டது. அதனால் அவர் தனது பயணத்தை முடித்துக்கொள்ளலாமா என்றுகூட அப்போது நினைத்தார்’ என்றுள்ளார்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தொடங்கி வைத்த காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமையாத்திரை, சுமார் 140 நாட்களாக கேரளா - கர்நாடகா - ஆந்திரா - தெலுங்கானா - மகாராஷ்டிரா - மத்திய பிரதேசம் - ராஜஸ்தான் - ஹரியானா - டெல்லி - உத்தர பிரதேசம் – பஞ்சாப் - ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து இறுதியில் ஜனவரி 30 ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.

இந்த நெடும் பயணம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “தொடக்கத்தில் இது மிகவும் சிரமமாகவே இருந்தது. சுமூகமாக இல்லை. 3-வது நாளே ராகுல் காந்திக்கு தீவிர மூட்டு வலி ஏற்பட்டது. அவரே என்னை அழைத்து, தன் வலியின் தீவிரத்தை கூறினார். மேர்கொண்டு வேறொரு காங். தலைவரை ராகுல் இடத்தில் வைத்துவிட்டு அவரை ரீப்ளேஸ் செய்யக்கூட அறிவுறுத்தப்படது.

பின் பிரியங்கா காந்திக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னோம். அவருக்கும்கூட வேறொரு மூத்த தலைவரிடம் பணியை ஒப்படைக்கலாமென்றே தோன்றியது. ஆனால் நான் மட்டும்தான் ராகுல் காந்தி இல்லாமல் மாபெரும் யாத்திரையை நினைத்துப் பார்க்க முடியாது என்று சொன்னேன். அதனால் யாத்திரை முழுக்க ராகுலுடன் பயணிக்குமாறு பிசியோதெரபிஸ்ட் ஒருவரை நியமித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக வலி சரியானது அவருக்கு” என்றுள்ளார். இதுபற்றி பயணம் தொடங்கிய சில தினங்களிலேஎயே கேரளாவில் வைத்து ராகுல் காந்தியேவும் பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com