தீபாவளிப் பண்டிகை|எந்தெந்த மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க கடும் நிபந்தனை.. தமிழ்நாட்டில் என்ன நிலை?

தீபாவளி பண்டிகையை ஒட்டி நாட்டின் பல மாநிலங்களில் பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை மற்றும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது அவை எந்தெந்த மாநிலங்கள் என்பது குறித்து தற்போது காணலாம்..
தீபாவளி
தீபாவளி முகநூல்
Published on

டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் பட்டாசு பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

காற்று மாசு AI புகைப்படம்
காற்று மாசு AI புகைப்படம்pt web

கடும் காற்று மாசுபாட்டினால் சிக்கி தவித்து வரும் தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனை சேமித்து வைப்பது உற்பத்தி செய்வது ஆன்லைன் விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு என்பது வரும் 2025 ஜனவரி ஒன்றாம் தேதி வரை இருக்கும் எனவும் டெல்லி மாசு மாசு கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது

பீகாரில் பட்டாசுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீகாரின் பாட்னா, கயா, முசாபர்பூர் மற்றும் ஹாஜிபூர் போன்ற முக்கிய நகரங்களில், பசுமை பட்டாசுகள் உட்பட அனைத்து வகையான பட்டாசுகளுக்கும் முழுமையான தடையை அமல்படுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் காற்று மாசு அதிகம் உள்ளதால் பச்சை பட்டாசுகளை மட்டுமே அரசு அனுமதித்துள்ளது,.

கர்நாடகாவில் தீபாவளியின் போது பச்சை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அம்மாநில அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பட்டாசு பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் NGT உத்தரவுகளைத் தொடர்ந்து பஞ்சாப் அரசு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. தீபாவளி, குர்புராப், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளில் குறிப்பிட்ட நேரங்களுக்கு மட்டுமே பட்டாசு பயன்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் பச்சை பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளதோடு கால வரம்பையும் வெளியிட்டுள்ளது.

கேரளாவில் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று இரவு 11:55 முதல் 12:30 மணி வரையிலும், இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் பச்சை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளது

தமிழ்நாட்டை பொறுத்த வரை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறைந்த மாசு, குறைந்த ஒலி கொண்ட பசுமை பட்டாசுகளை பயன்படுத்த அறிவுறுத்தல் கொடுத்துள்ளது

தீபாவளி
தீபாவளிpt web

மேற்கு வங்காளத்தில், என்ஜிடி உத்தரவுகளுக்கு இணங்க, சான்றிதழ் பெற்ற பச்சை பட்டாசுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அரசு நிபந்தனை விதித்துள்ளது. கொல்கத்தாவில் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மக்கள் பட்டாசுகளை வெடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com