நீட் தேர்வு| வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? குழு அமைத்து விசாரிக்க மத்திய அரசு முடிவு!

”நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும்” என மத்திய உயர்கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு
நீட் தேர்வுஃபேஸ்புக்

நடப்பு ஆண்டுக்கான நீட் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி, வெளியாகின. இதில் 13,16,268 பேர் தேர்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் மட்டும் 1,52,920 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும், நீட் தேர்வில் முதல் 100 இடங்களை பெற்றவர்களில் 67 பேர் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை எடுத்து முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இதனிடயே ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தில் மட்டும் 8 பேர் முதலிடம் பெற்றிருப்பதும், அதுபோல் நிறைய மாணவர்கள் 718, 719 மதிப்பெண்களைப் பெற்றிருப்பதும் கேள்விக்கு இடமளித்துள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வுtwitter

இதையடுத்து பலரும், ”மெல்ல மெல்ல நீட் தேர்வு மோசடியாக மாறுகிறதா” எனக் கேள்வி எழுப்பினர். இப்படி பலரும் புகார்கள் எழுப்பிய பிறகு, 'சிலருக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன' என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. ஆயினும் அது தொடர்பாகவும் கல்வியாளர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும், இவை சந்தேகங்களை எழுப்புவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதையும் படிக்க:வெறும் 5 நாட்களில் ரூ.579 கோடி.. கிடுகிடுவென உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்துகள்!

நீட் தேர்வு
வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? நீட் தேர்வு குறித்து அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள்!

குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாள சீமான் உள்ளிட்ட சிலர் நீட் தேர்வு முடிவுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர். குறிப்பாக, நீட் தேர்வில் மகாராஷ்டிர மாநில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப், "நீட் தேர்வு பணம் வாங்கிக் கொண்டு நடத்தப்பட்டிருக்கலாம். மகாராஷ்டிராவைச் சேர்ந்த எந்த மாணவர்களும் மாநிலத்தில் உள்ள அரசு அல்லது தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேராத வகையில் நீட் தேர்வு முடிவுகள் வந்துள்ளன. பல மாணவர்களின் பெற்றோர்கள் இப்பிரச்னைக்குத் தீர்வுகாணக் கோரி என்னை அணுகினர். இது மகாராஷ்டிராவுக்கு அநீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதுபற்றி என்எம்சியிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் அரசாங்கம் ஆலோசித்து வருகிறது” என பாஜக கூட்டணி அரசே தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிக்க: கங்கனாவை அறைந்த விவகாரம்| பெண் காவலருக்கு கிளம்பும் ஆதரவும், எதிர்ப்பும்! விவசாயிகள் எடுத்த முடிவு!

நீட் தேர்வு
நீட் தேர்வு| வினாத்தாள் கசிவில் உண்மையில்லை.. ஆனால்? போலீசார் விசாரணையில் புதிய தகவல்!

இப்படி, நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அத்தேர்வை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கும் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், ”நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும்” என மத்திய உயர்கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். கருணை மதிப்பெண் வழங்கியதால்தான் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வு மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:காஸாமீது தாக்குதல்.. பலியாகும் அப்பாவி உயிர்கள்.. போர் குறித்து அமெரிக்காவில் பேசப் போகும் இஸ்ரேல்!

நீட் தேர்வு
வினாத்தாள் கசிவு.. ரிசல்ட்டில் குளறுபடி? நீட் தேர்வு குறித்து அடுக்கடுக்காக எழும் குற்றச்சாட்டுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com