மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க குழு: உச்சநீதிமன்றம் அமைத்தது

மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க குழு: உச்சநீதிமன்றம் அமைத்தது
மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க குழு: உச்சநீதிமன்றம் அமைத்தது
Published on

மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க புதிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற
மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க வழிகாட்டு முறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.

மூத்த வழக்கறி‌ஞர் பதவிக்கு தேர்வு செய்வதற்காக, தற்போது வழக்கத்தில் உள்ள நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை
எனக்கூறி மூத்த‌ வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த ‌வழக்கை நீதிபதிகள் ரஞ்சன்
கோகாய், ரோகிண்டன் நரிமன், நவின் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்துள்ளது. அதன்படி உச்சநீதிமன்றம்
மற்றும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க நிரந்தர குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் தலைமை நீதிபதி,‌
தற்போது பணியில் உள்ள 2 மூத்த நீதிபதிகள், அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன், பார் கவுன்சிலில் இருந்தும் ஒரு
வழக்கறிஞர் இடம் பெறுவர்.‌ உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‌உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரை நியமிக்கும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் மத்திய அரசின் தலைமை
வழக்கறிஞரும் இடம் பெறுவர். உயர்நீதிமன்ற வழக்கறிஞரை நியமிக்கும் குழுவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில அரசின்
தலைமை வழக்கறிஞர் இடம் பெறுவர். மேலும் மூத்த வழக்கறிஞர் நியமனத்திற்கான பணிகளை மேற்கொள்ள நிரந்தர குழுவில்
செயலாளர் ஒருவரும் தேர்வு செய்யப்படுவார். அவர், மூத்த வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விவரங்களை
சம்பந்தப்பட்ட நீதிமன்ற இணையதளத்தில் பதவியேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்வார். விண்ணப்பித்தவர்களின் பணிக்கால
அனுபவம், வழக்குகளில் வாதாடிய விதம், ஆளுமைத் தன்மை, தனிப்பட்ட நடத்தை ஆகியவற்றை நிரந்தர குழு ஆய்வு செய்யும்.
விண்ணப்பித்தவர்களின் திறமைக்கு ஏற்றவாறு நிரந்தர குழு மதிப்பெண்கள் வழங்கும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின்
அனைத்து நீதிபதிகள் முன்பு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மையான நீதிபதிகளின் ஆதரவு இருப்போர் மூத்த
வழக்கறிஞராக தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com