தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 30-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘மோடியின் 8 ஆண்டுக்கால ஆட்சி... சாதனைகள் அதிகமா... வேதனைகள் அதிகமா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
பணமதிப்பிழப்பு தொடங்கி கங்கையில் மிதந்த கொரோனா சடலங்கள் மற்றும் சிறுபான்மையினர்-விளிம்புநிலை மக்கள் மக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் வழியே சென்று இன்று தனது நெருங்கிய நண்பரின் சொத்து-வருமானம் ஆயிரச் சதவீத கணக்கில் உயர்ந்து செல்வது வரை அனைத்தும் நிம்மதியற்ற வேதனையே!
இந்தியாவின் மாபெரும் சொத்து நரேந்திர மோடி ஜி அவர்கள் அவர்கள் பதவியேற்றதிலிருந்து மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இந்திய மக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளனர் அவருடைய தன்னலமற்ற பொதுநல தொண்டு உள்ளத்தோடு இந்தியாவை தலைநிமிர செய்துள்ளார் இனி இந்தியா என்றால் பாரதிய ஜனதா கட்சி என்றுதான் அடங்கும் இதை யார் குறை சொன்னாலும் 50 ஆண்டுகளுக்கு மாற்றமுடியாது இதுதான் உண்மை.
சாதனைகள் அதிகம் பெரும் பணக்காரர்களுக்கு. சோதனைகள் அதிகம் மக்களுக்கு.
2014-2019 - OK.. Demonetization தவிர மற்ற அனைத்து செயல்களும் ஓர் அளவுக்கு நன்றாகவே செயல்பட்டனர் பா ஜ க.
2019- இன்று வரை - பெரும் சரிவு. பொருளாதார வீழ்ச்சி.. கொரோனா வந்ததால் இந்த நிலை என்பது உண்மை. ஆனால் ஒன்றிய அரசு பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தென் மாநிலங்கள் முற்றிலும் ஒதுக்கப்பட்டன. சில மாநிலங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தியது ஒன்றிய அரசு. நாட்டை சீர் செய்வதில் கவனம் செலுத்தாமல் மற்ற விஷங்களில் மட்டுமே கவனம் செலுத்த முயற்சிக்கின்றனர். தீவிர மத அரசியலை பரப்புகின்றனர். இது சரியல்ல. மீதி காலமாவது சற்று கவனமாக ஆட்சி செய்ய வேண்டும்.
வாழ்க பாரதம். வாழ்க தமிழகம்.
மக்களுக்கு வரி மேல் வரி விதித்து கார்பரேட்டுக்கு கைமாத்தி விடும் அரசு
இந்த ஆட்சி ஒரு வரலாற்று பிழை.
Selvi Dhineshwaran
இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு, மோடி ஜி யின் சாதனைகளை பட்டியலிட ஒரு யுகம் போதாது
இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.