முதல்வர் தன் மாநிலத்திற்காக பிரதமரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்?- வாசகர் கமெண்ட்ஸ்

முதல்வர் தன் மாநிலத்திற்காக பிரதமரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்?- வாசகர் கமெண்ட்ஸ்
முதல்வர் தன் மாநிலத்திற்காக பிரதமரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்?- வாசகர் கமெண்ட்ஸ்
Published on

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 27-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பிரதமர் முன்பு முதல்வர் பேசிய பேச்சைப் பற்றிய விமர்சனங்கள்... ஆரோக்கியமானதா... அவசியமற்றதா?' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

அவசியமற்றதுதான், பாரத பிரதமரை பொதுவான அரசு விழாவில் வைத்துக் கொண்டு அரசியல் பேசியதை முதல்வா் தவிா்த்திருக்கலாம். மேலும் தனிப்பட்ட முறையில் கோாிக்கை மனு வழங்கியிருக்கலாம். திமுக பொதுக்கூட்ட மேடைபோல அரசு விழா மேடையை பயன்படுத்துவதை தவிா்த்து அரசியல் பேசுவதை கைவிடலாம்.

அவசியமானதுதான். தமிழ் நாட்டுக்காகவும் , தமிழர் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பதில் அளிக்காமல் சென்றது பிரதமரின் வெட்கக்கேடான செயல்.

இந்தியத் தலைமை அமைச்சரிடம் உரிமையோடு கேட்பது ஆரோக்கியமானது.

இப்போதெல்லாம் எல்லா உரிமைகளும் கட்சி சார்ந்து மாறுபடுகிறது...பிஜேபி காரன் முதல்வர் பேசியது தவறு என்பார்..ஆனால் அவர் பேசியது எல்லாமே சரி தான். நேரில் பார்த்து சொல்லி ஒரு வருடமாச்சி...ஒரு கட்சி சார்பற்ற சாமானியன் பார்வையில் சரி...சரி...அதை எல்லாருக்கும் பொதுவான பிரதமர் உணரவேண்டும்…

மிகவும் ஆரோக்கியமானது முதல்வர் தன்னுடைய மாநிலதிற்காக இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம்?

Suresh Chandrasekaran

விமர்சனங்கள் என்பது எந்த விஷயமானாலும் இருக்கத்தான் செய்யும். இந்த நிகழ்வை பொறுத்தமட்டில், முதல்வர் பேசிய பேச்சு உண்மையிலேயே சிறப்பானது. காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் நிறைவேற்றுகிற மசோதாக்களை துளியும் மதிக்காமல் காலம் தாழ்த்தி தட்டிக் கழிக்கும் ஆளுநர் முன்பே, நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என மரியாதைக்குரிய பிரதமரிடம் மக்கள் மேடை அரசு விழாவில் கோரிக்கை வைத்தது உண்மையிலேயே தரமான செயல். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், வெறும் திட்டப்பணிகளை திறந்துவைப்பதோடு மட்டும் நிற்காமல், சந்தர்ப்பம் அமையும் போது மக்கள் முன் வெளிப்படையாக தங்கள் அரசின் கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்பது நிச்சயம் மிக சரியான அரசியல் நகர்வு.

அதேபோல் தமிழகத்தின் GST பங்கையும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை உரிமையோடு கேட்டது சிறப்பு. எனவே முதல்வரின் பேச்சுக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது முற்றிலும் அவசியமற்றது. அதே வேளை, Constructive Criticism ஆக இருந்தால் எந்த ஒரு விமர்சனமும் ஆரோக்கியமானதே. ஆனால் என்னை பொறுத்தவரை முதல்வரின் பேச்சு அருமை. உறவுக்கு கை கொடுப்போம்! உரிமைக்கு குரல் கொடுப்போம்!

இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூகவலைதள பக்கங்களில் பகிரப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com