ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாகப்பாம்பு ஒன்று, இருமல் மருந்து பாட்டிலை விழுங்கியுள்ளது. இது, அதன் தொண்டையில் சிக்கி சிரமப்பட்டது. இதையடுத்து, பாம்பு ஹெல்ப்லைனிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் பொதுச் செயலாளர் சுபேந்து மல்லிக் சம்பவ இடத்திகு விரைந்தார். அவர், தனது கொக்கி முனையால் நாகப்பாம்பின்கீழ் தாடையை மெதுவாக விரித்து பாட்டிலை எடுத்தார். பின்னர், பாம்பைப் பிடித்துச் சென்ற நகருக்கு வெளியே இருந்த காட்டில் கொண்டுபோய் விட்டார்.
இதுகுறித்து சுபேந்து மல்லிக், “கவனக்குறைவாக வீசப்பட்ட மருந்துப் பாட்டிலை அது இரையென எடுத்து உண்ண ஆரம்பித்திருக்கலாம். இதனால், அது தொண்டையில் சிக்கி அதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.