‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்

‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்
‘ஜெயலலிதா’ பெயரில் டெல்லியில் பள்ளிக் கட்டடம்
Published on

‘புரட்சித் தலைவி அம்மா’ பெயரில் டெல்லியில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

டெல்லி தமிழ் கல்விக் கழகத்தின் சார்பில், டெல்லியில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். 

டெல்லி தமிழ் கல்விக் கழகம் சார்பில், மயூர் விகார் பள்ளி வளாகத்தில், புதிதாக கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தப் பள்ளிக் கட்டடத்திற்கு தமிழ‌க அரசு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ‌'புரட்சித் தலைவி அம்மா' என பெயரிடப்படும் இந்த பள்ளிக் கட்டடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். 

டெல்லியில் நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய பள்ளிக் கட்டடம்‌ 6,515 சதுர மீட்‌டர் பரப்பளவில்‌, தரை மற்றும் 4 தளங்களுடன் அமையவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com