செஸ் வரி உயர்வு மாநிலங்களை பாதிக்கும் - முதல்வர் பழனிசாமி

செஸ் வரி உயர்வு மாநிலங்களை பாதிக்கும் - முதல்வர் பழனிசாமி
செஸ் வரி உயர்வு மாநிலங்களை பாதிக்கும் - முதல்வர் பழனிசாமி
Published on

மத்திய அரசின் மேல் வரி அளவு(CESS) மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை பாதிக்கும் என முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் 2021-22 பட்ஜெட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். அதேநேரத்தில் பல்வேறு விதமான விமர்சனங்களும் அவர் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அந்த அறிக்கையில் ’’மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், தமிழகத்திற்கு உகந்த பல அறிவிப்புகளும் உள்ளன. கொரோனா தடுப்பூசிக்கு ஒதுக்கியுள்ள நிதிக்கு வரவேற்பு அளிக்கிறேன். அதேசமயத்தில் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதியுதவியை மேலும் உயர்த்தி வழங்கவேண்டும். தமிழ்நாட்டில் 3500 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். மதுரை - கொல்லம், சித்தூர் - தக்சூர் சாலைப் பணிகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

நெடுஞ்சாலைப் பணிகள் ரூ.1.03 லட்சம் கோடி செலவில் மேற்கொள்ளப்படுவது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டும். சாலை திட்டங்களை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசு ஒத்துழைப்பு நல்கும். அதே சமயம் மத்திய கலால்வரி மேலும் குறைக்கப்பட்டு, மேல் வரி மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது நிதிநிலையை பாதிக்கும். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று கலால்வரி முறையில் முந்தைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும். மேல் வரியில் முந்தைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் சேலம், தென் மாவட்டங்களில் தலா ஒரு ஜவுளிப் பூங்கா அமைக்கவேண்டும். தமிழகத்தில் சர்வதேச நிதி நிறுவனத்தை ஏற்படுத்த திட்டத்தை அறிவிக்கவேண்டும். மத்திய அரசின் திட்டத்தில் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு நிதியுதவி அளிக்கவேண்டும்’’ என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com