“நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்” - கடுமையாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வில் பூஜ்ஜியம் எடுத்திருந்தாலும் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

முதுகலை நீட் தேர்வில் பூஜ்ஜியம் எடுத்திருந்தாலும் மருத்துவப்படிப்பில் சேரலாம் என்று நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.

mkstalin
நீட் தேர்வு: பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுகலையில் வாய்ப்பு!
நீட் தேர்வு
நீட் தேர்வுtwitter

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய பாஜக அரசு ஒப்புக்கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “நீட்டின் பலன் ஜீரோ என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. NEET PG கட்-ஆஃப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய 'தகுதி' மற்றும் நுழைவுத் தேர்வில் 'தகுதி' என்பது அர்த்தமற்றது என்பதை அவர்களே (மத்திய அரசு) ஏற்றுக்கொள்கிறார்கள். இங்கு மருத்துவப்படிப்பு என்பது, பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துவது பற்றியது மட்டுமே. மற்றபடி எந்த தகுதியும் தேவையில்லை.

NEET = 0. NEET க்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இப்போது தேர்வு வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை.

விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. NEET என்ற தூக்குமேடை மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக, நாம் பாஜக அரசை அகற்ற வேண்டும்” என கடுமையாக சாடியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com