“ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி”- கலவரக் களமாக மாறிய திருமண விழா..!

“ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி”- கலவரக் களமாக மாறிய திருமண விழா..!
“ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி”- கலவரக் களமாக மாறிய திருமண விழா..!
Published on

தெலங்கானாவில் திருமண விருந்தில் ஆட்டுக்கறிக்கு பதில் பதில் கோழிக்கறி பறிமாறியதால் மணமகன்- மணமகள் வீட்டார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் உள்ள உப்புசாகு கிராமத்தில் பிரவீன், அஜ்மீரா ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருதரப்பு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. அப்போது மணமகன் தரப்பு உறவினர்கள் சிலர் மது அருந்தி இருந்த நிலையில் திருமண விருந்தில் ஆட்டுக்கறி ஏன் பரிமாறவில்லை என மணமகள் வீட்டாரிடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு போதிய பணம் இல்லாததால் ஆட்டுக்கறிக்கு பதில் கோழிக்கறி விருந்து போட்டோம் என்று மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருடன் தீவிர வாக்கு வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து வாக்குவாதம் மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டது.. உணவு பரிமாறுவதற்காக போடப்பட்டிருந்த பந்தலில் கட்டைகளை பிடுங்கியும்,  நாற்காலிகளை தரையில் வீசியும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பு உறவினர்களும் காயமடைந்த நிலையில் புர்கம்பாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு புர்கம்பாடு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  திருமணம் வரை அனைவரும் சந்தோஷமாக மணமக்களை வாழ்த்திய நிலையில் ஒரு சிலர் செய்த தவறால் மகிழ்ச்சியாக நடந்த திருமண விழா கலவரமாக மாறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com