மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய பிடித்தம் உயர்வு: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய பிடித்தம் உயர்வு: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய பிடித்தம் உயர்வு: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on

2022-23 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10% என்பதிலிருந்து 14% என்று உயர்ந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் திருத்தப்பட்ட வருமானவரி கணக்கு தாக்கல்செய்ய ஒராண்டு அவகாசம் இருந்த நிலையில், அது 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்புகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15% என குறைந்துள்ளது. வரும் ஆண்டில் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடி என்றும், வரவு ரூ. 22.8 லட்சம் கோடியாக இருக்குமென்று அமைச்சர் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசின் நிதி பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 6.4% என குறையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com