‘குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல’ - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

‘குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல’ - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
‘குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல’ - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
Published on

குடியுரிமை சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது எனவும், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜிதேந்திர சிங், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை வழங்கவே இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதாக கூறினார்.

சிறுபான்மையினர் மனதில் அச்சம் விதைக்கப்பட்டுள்ளதாகவும், இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஓரிடத்தில் கூட இந்திய இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் வகையிலான வார்த்தைகள் குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இடம்பெற்றிருக்காது என்றும் தெரிவித்தார். இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் குறிபிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com