குல்விந்தர் கவுர், கங்கனா
குல்விந்தர் கவுர், கங்கனாஎக்ஸ் தளம்

கங்கனாவை அறைந்த விவகாரம்| பெண் காவலருக்கு கிளம்பும் ஆதரவும், எதிர்ப்பும்! விவசாயிகள் எடுத்த முடிவு!

கங்கனா ரனாவத்தை அறைந்தது விவகாரம் தொடர்பாக நாடு முழுதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் அமோக வெற்றிபெற்றுள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூன் 7) சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பெண் காவலர் ஒருவர், அவரை அறைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கங்கனா ரனாவத்தும் வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திடமும் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் இச்சம்பவம் பரபரப்பான நிலையில், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த அந்தப் பெண் காவலரான குல்விந்தர் கவுர், உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில், இதுதொடர்பாக குல்விந்தர் கவுரும் விளக்கம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதாவது விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் கங்கனா ரனாவது பேசியதுதான் இந்த கோபத்திற்கு காரணம் என்று அந்தப் பெண் காவலர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

எனினும், விமானநிலையத்தில் சோதனை அறைக்குள் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அது தொடர்பான வீடியோ எதுவும் வெளியாகவில்லை. தற்போது வைரலாகி வரும் வீடியோ வெளியே பிரச்னை நடந்த பின்பு எடுக்கப்பட்டதுதான். இதைத் தொடர்ந்து கங்கனா அறையப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கங்கனா ரனாவத்தை அறைந்தது விவகாரம் தொடர்பாக நாடு முழுதும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இதையும் படிக்க: முஸ்லிம் To பெளத்தம்: 4 மதங்களில் இருந்து பாஜக கூட்டணியில் 1 எம்.பி கூட இல்லை! முடிவுகள் ஓர் அலசல்!

குல்விந்தர் கவுர், கங்கனா
“விவசாயிகள் ரூ.100-க்கு போராடுறாங்களா?” - கங்கனா அறையப்பட்ட விவகாரத்தில் பெண் காவலர் சொன்ன விளக்கம்!

கங்கனாவை அறைந்தது தவறு என அவரை எதிர்த்து இமாச்சல் மண்டியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது யாருக்கும், குறிப்பாக தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருக்கும் ஒரு பெண்மணிக்கு நடக்கக்கூடாது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக அந்தப் பெண் காவலருக்கு ஆதங்கம் இருந்துள்ளது. ஆனால் இதுபோன்ற ஒருவரைத் தாக்கியது, துரதிர்ஷ்டவசமானது. இதை நாங்கள் கண்டிக்கிறோம், இதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு தலைவர் சஞ்சய் ராவத், “தாய் கலந்துகொண்ட விவசாயப் போராட்டத்தை பற்றி கொச்சையாக எவர் பேசியிருந்தாலும் மகளுக்குக் கோபம் வரத்தான் செய்யும். சிலர் வாக்குகளின் வழியாக, தன் எதிர்ப்பைத் தெரிப்பார்கள். இன்னும் சிலர் அறைந்து தன் எதிர்ப்பைக் காட்டுவார்கள். எனினும் பெண் காவலர், சட்டத்தைக் கையில் எடுத்திருக்க வேண்டியதில்லை. கங்கானாவுக்கு நேர்ந்த சம்பவம் தவறுதான். எனினும் விவசாயிகளும் மதிக்கப்பட்டிருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அக்னிவீர் திட்டத்திற்கு ஆப்பு.. ஆட்டத்தைத் தொடங்கிய நிதிஷ்குமார்.. அழுத்தத்தில் பாஜக தலைவர்கள்!

குல்விந்தர் கவுர், கங்கனா
”பஞ்சாப்பில் தீவிரவாதிகள் அதிகரிப்பு” - பாதுகாப்பு காவலர் கன்னத்தில் அறைந்ததாக கங்கனா ரனாவத் புகார்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்திய பெண் காவலருக்கு, மொஹாலியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவராஜ் சிங் பெயின்ஸ் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.

அதுபோல் விவசாயச் சங்கங்களும் கங்கனா ரனாவத்துக்கு ஆதரவாக பேரணி நடத்த முடிவு செய்துள்ளன. ’பெண் காவலருக்கு எதிராக தேவையற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது; விமான நிலையத்தில் நடந்த சம்பவத்திற்கு வழிவகுத்த முழு நிகழ்வுகள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரி ஜூன் 9ஆம் தேதி பஞ்சாபின் மொஹாலியில் இன்சாஃப் (நீதி) அணிவகுப்புக்கு விவசாயிகள் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இதையும் படிக்க: 2014, 2019, 2024| நாடாளுமன்றத்தில் கட்சிகள் பலம் எவ்வளவு? ஒரு பார்வை!

குல்விந்தர் கவுர், கங்கனா
மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து இப்படியெல்லா பேசிவிட்டு பல்டி அடிக்கிறாரா கங்கனா? தொடரும் சர்ச்சை!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com