உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பர்ஹோட்டி பகுதி எல்லையில் சீன ராணுவத்தினர் இந்த மாதத்தில் இரண்டு முறை ஊடுருவியதாக தகவல் தெரியவந்துள்ளது. எனினும் இந்த சம்பவங்களுக்கு தேவையில்லாமல் முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 25 ஆம் தேதி சீன ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 20 வீரர்கள், சமோலி மாவட்ட பகுதியில் சுமார் 800 மீட்டர் தூரம் இந்தியப் பகுதிக்குள் வந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்தியப் பகுதிக்குள் அவர்கள் இரண்டு மனிநேரம் இருந்ததாகவும் அப்போது அங்கு வந்த ஆட்டிடையர்களை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தியர்கள் தரப்பில் எதிர்ப்புத் தெரிவித்த பின்னரே அவர்கள் வெளியேறியாதவும் சொல்லப்படுகிறது. எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் முயற்சியை அடுத்து டெல்லியில் ராணுவ ஆதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சிக்கிம் மாநிலம் டோக்லாமில் சீன படைகள் அச்சுறுத்தி வரும் நிலையில் இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.