பான்காங் சோ ஏரி அருகே அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை விரட்டியடித்தது இந்திய படை!
கடந்த ஜூன் 15 ம் தேதி கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பின் இந்தியா சீனா இடையிலான பதற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது. பின்னர் ஒரு கட்டத்தில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை கண்டு சீனப் படைகள் பின் வாங்கின. படைகளை விலக்கிக் கொள்வதாக சீன அரசு கூறி வரும் போதிலும், சீனா அதை செயலில் முழுமையாக காட்டவில்லை.
இந்நிலையில் லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி நுழைய முயன்றுள்ளது. பான்காங் சோ ஏரி அருகே அத்துமீற நுழைய முயன்ற சீன ராணுவத்தை இந்திய ராணுவப் படை விரட்டியடித்துள்ளதாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தகவல் பான்காங் சோ தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ராணுவம் ஈடுபட்டுள்ளதாக இந்திய ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.