காஷ்மீர் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் : சீனா வலியுறுத்தல்

காஷ்மீர் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் : சீனா வலியுறுத்தல்

காஷ்மீர் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் : சீனா வலியுறுத்தல்
Published on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தனி ஆலோசனை நடத்தப்பட வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு ஷரத்தை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. அத்துடன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்தியாவின் இந்த அதிரடியான முடிவுக்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் அந்நாடு மேற்கொண்டு வருகிறது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையிலே கருத்து தெரிவித்தன. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்ற கருத்தினையே பல நாடுகளும் கூறின.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியது. அந்த வகையில் சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோரிக்கை விடுத்துள்ளது. 

ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு தற்போது போலந்து தலைமைப் பொறுப்பில் உள்ளது. அதனால், போலாந்திடம் சீனா இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது. சீனாவின் கோரிக்கை குறித்து மற்ற உறுப்பு நாடுகளிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என போலாந்து தெரிவித்துள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com