சீனாவில் இருந்து வந்து இந்தியராகவே வாழ்ந்த நபர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

சீனாவில் இருந்து வந்து இந்தியராகவே வாழ்ந்த நபர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!
சீனாவில் இருந்து வந்து இந்தியராகவே வாழ்ந்த நபர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!
Published on

சந்தேகத்திற்குரிய ஷெல் நிறுவனங்கள் மூலமாக ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா மோசடி செய்ததற்காக சீனாவை சேர்ந்த 42 வயதான லூவோ சாங் மீது பணமோசடி வழக்கு ஒன்றை அமலாக்க இயக்குநரகம் நேற்று பதிவு செய்தது. 

மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனாவை சேர்ந்த லூவோ சாங் இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறி தன்னை இந்தியர் என அடையாளப் படுத்திக் கொண்டு சார்லி பெங் என்ற பெயரில் இந்தியராகவே வலம் வந்துள்ளார். அக்கம் பக்கத்தினரிடம் பார்மசி தொழில் செய்து வருவதாக சொல்லி வந்த சார்லி பெங் தன்னை பெரும் பணம் படைத்தவராகவே காட்டிக் கொண்டுள்ளார். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளார். 

2009 வாக்கில் சீனாவில் இருந்து புறப்பட்ட பெங் திபெத் மற்றும் நேபாள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். 

இங்கு பார்மசி மற்றும் ஆடையக தொழிலை செய்து வந்த அவர் இந்திய நாட்டிற்கு எதிரான தேச விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளார். அவர் குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்த நிலையில் கடந்த 2018 செப்டம்பரில் அவர் கைது செய்யபப்ட்டுள்ளார். 

மோசடி குற்றச்சாட்டில் அவரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்திருந்தது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சட்டவிரோதமாக பணம் மாற்றிய குற்றமும் சாட்டப்பட்டது.

அதனையடுத்து மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் வருமான வரித் துறையினரால் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த வாரம் CBDT அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பெங் ஷெல் நிறுவனங்களின் தொடர்புகளோடு பல கோடி ரூபாய் ஹவாலா மோசடியில் அவர் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தது.

ஹாங்காங் மற்றும் அமெரிக்க டாலர்கள் மாதிரியான வெளிநாட்டு கரன்சிகளை ஹவாலா பரிவர்த்தனை செய்தததற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளதாக CBDT தெரிவித்துள்ளது.

‘பெங் அவரது பாஸ்போர்ட்டை விடுவிக்க வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆழமான விசாரணைகளை மேற்கொண்டால் பெங் எந்த நிறுவனத்திற்காக பணியாற்றி வந்தார் என்பதும், சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியுள்ள சீனர்களின் விவரங்களையும் அறியலாம்’ என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com