இந்திய சீன எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கிற்கு சீனா முழு உரிமை கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த உரிமை கோரல் பிரச்னைக் குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும் போது “ இந்தியா கல்வான் பள்ளத்தாக்கில் விதிகளை மீறி சாலைகளையும், பாலங்களையும் கட்டியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு இந்திய சீன எல்லையின் சீனாவின் எல்லைக்குட்ப்பட்ட மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது.” என்று கூறியுள்ளது.
சீன வரைபடத்தை வைத்து விளக்கியுள்ள சீனா “ கல்வான் ஆறின் மொத்தப் பரப்பும் சீன எல்லைக்கு உட்பட்ட இடத்தில் இருப்பதாகவும், ஆறின் மேற்குப் பகுதியானது ஷியோக் ஆற்றுடன் வந்து இணைவதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் கல்வான் பள்ளத்தாக்கு, ஆறுகள் சங்கமமாகும் இடம் மற்றும் தற்போது இந்தியா கட்டுமான பணிகளை மேற்கொண்டிருக்கும் இடம் உள்ளிட்டவற்றிற்கு சீனா உரிமை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறும் போது “ சீனா தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் கூறியுள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் “ பல்லாண்டுகளாக சீன வீரர்கள் கல்வான் எல்லையில் அவர்களது பணியை செய்து வருகின்றனர். ஆனால் கடந்த ஏப்ரம் மாதத்தில் இந்தியா விதிகளை மீறி ரோந்து பணிகளை மேற்கொள்வதற்காகவும், பிற வசதிகளுக்காகவும் சாலைகள் மற்றும் பாலங்களை கட்டியுள்ளது. இது குறித்து சீனா பல முறை எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் அந்த பணிகளானது தொடந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது.
கடந்த மே மாதம் ஆறாம் தேதி இரவு சீன எல்லைக்குள் இந்தியா கட்டுமான பணிகளை மேற்கொண்டது. அப்போது சீனா தனது எச்சரிக்கையை வீரர்களிடம் தெரிவித்தது. அதன் பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஜூன் ஆறாம் தேதி மேல் அதிகாரிகளுடனான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் மூலம் அவரவது நாட்டின் எல்லையை மீறி இரு தரப்பினரும் வரக்கூடாது என பேசப்பட்டது. ஆனால் இந்தியா தனது கட்டுமானப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொணடதன் காரணமே ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது.