கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தை... கச்சிதமாக பிடித்த தமிழக போலீஸ்

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தை... கச்சிதமாக பிடித்த தமிழக போலீஸ்

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குழந்தை... கச்சிதமாக பிடித்த தமிழக போலீஸ்
Published on

கர்நாடகாவில் இருந்து குழந்தையை கடத்தி வந்த கடத்தல்காரர்களை தமிழக போலீசார் கச்சிதமாக பிடித்துள்ளனர். 

கேரள மாநிலம் காட்டாகடையை சேர்ந்த ஜோசப்ஜானுக்கும் ஆந்திராவை சேர்ந்த எஸ்தருக்கும் ஊழியம் செய்வதில் ஏற்பட்ட பழக்கத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து லோகிதா என்ற இரண்டரை வயது குழந்தையை கடத்தி கொண்டு நேற்று கேரள வழியாக தமிழகம் வந்தபோது களியக்காவிளை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் இவர்கள் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதில் அவருடன் வந்த ஜோபின் (7) என்ற ஆண் குழந்தை, ஜோசப்ஜானின் முதல் மனைவி பிந்துவின் மகன் என்று தெரிவித்தார். அதோடு அந்த பெண் குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார் இதனிடையே அந்த 7 வயது ஆண் குழந்தையும் கடத்தல் குழந்தையாக இருக்கலாம் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தை கடத்தல் தொடர்பாக அந்த குழந்தையின் தாய் கார்த்திகேஷ்வரி கர்நாடக மாநிலம் உப்பர்பேட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே அந்த குழந்தையின் தாயுடன் கர்நாடக போலீசார் களியக்காவிளைக்கு வந்துள்ளனர். தமிழக போலீசார் குழந்தையையும் குற்றவாளிகளையும் பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். 

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வரும் சித்ரா என்பவர் இரண்டு குழந்தைகளுக்கு போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்ததன் பெயரில் அவரை கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த காப்பகத்தின் உதவியுடன் இது போன்று பல குழந்தைகளை கடத்தி இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com