முதலைகள் நிறைந்த ஆற்றை துணிச்சலுடன் கடந்து, 7 ஆண்டுகளாக கிராம மக்களுக்கு மருத்துவ உதவி புரிந்து வரும் ஒரு செவிலியின் சேவை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா தாகூர் என்ற செவிலியர், தாண்டேவாடா பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு நீண்ட வருடங்களாக மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். தாண்டேவாடா பகுதிக்கு செல்ல முதலைகள் நிறைந்த இந்திராவதி ஆற்றை கடந்து அவர் செல்ல வேண்டும். இருப்பினும் முதலைகள் அதிகம் உலாவும் அந்த ஆற்றை கடந்து மருத்துவ சேவை செய்வதற்காக, தனது உயிரை துச்சமென மதித்துக் 7 ஆண்டுகளாக சென்று வருகிறார் சுனிதா.
இதற்காக சொந்தச் செலவில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக தற்காலிக படகு மூலம் ஆற்றைக் கடந்து மறு முனைக்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஒரு சிறிய கிராம மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குகிறார்.