மது அருந்துவதற்கு மனைவி பணம் தர மறுத்ததால் வீபரீத முடிவு எடுக்க உயர் அழுத்த கோபுரத்தில் ஏறிய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் தாதர் பகுதியில் வசித்து வருபவர், 26 வயதான கரண்.. மதுப்பழக்கத்திற்கு அடிமையான இந்நபர் தொடர்ந்து மது அருந்துவதையே தனது வாடிக்கையாக வைத்துள்ளார்.. இந்த நிலையில், மது அருந்த கையில் பணம் இல்லாததால், தனது மனைவியிடம் ரூ 500 தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், மனைவி தர மறுத்ததால், மிரட்ட தொடங்கியுள்ளார் கரண்.. இருப்பினும், அவரது மனைவி பணம் தர முடியாது என்று தொடர்ந்து மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கரண் தற்கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்..அதற்கும் மனைவி அசையாததால், மாணிக்பூர் காவல் நிலையத்தின் அருகில் 60 அடி உயரத்தில் இருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தவே, அங்கிருந்தவர்களில் சிலர், கரணிடம் பணம் தருவதாகவும், சிலர் மது வாங்கி தருவதாகவும் கூறி கீழே வருமாறு தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த கரணின் தாயார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை கீழே வரும்படி கெஞ்சியுள்ளார். இருப்பினும் கரண் கீழே வரவில்லை. இந்நிலையில், மாணிக்கபூர் புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவுட்போஸ்ட் இன்சார்ஜ் நவீன் படேல் தனது குழுவுடன் வந்து அந்த நபரை பத்திரமாக கீழே இறக்கியுள்ளனர்.
மது அருந்துவதற்காக இதுபோன்ற செயல்களை செய்வது சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது... மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க மறுவாழ்வு மையங்கள் அதிகளவில் நிச்சயமாக அமைக்கப்பட வேண்டும். சிறு சிறு மாற்றங்களை தற்போதிலிருந்தே செய்தால்தான் பிற்காலத்தில் சிறுதுளி பெருவெள்ளம் போல மாறும் சாத்தியம் அதிகம் உள்ளது.